/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ராவத்துார் ரோட்டில் வேகத்தடை அமைக்க மக்கள் கோரிக்கை ராவத்துார் ரோட்டில் வேகத்தடை அமைக்க மக்கள் கோரிக்கை
ராவத்துார் ரோட்டில் வேகத்தடை அமைக்க மக்கள் கோரிக்கை
ராவத்துார் ரோட்டில் வேகத்தடை அமைக்க மக்கள் கோரிக்கை
ராவத்துார் ரோட்டில் வேகத்தடை அமைக்க மக்கள் கோரிக்கை
ADDED : ஜூலை 23, 2024 01:59 AM

சூலுார்:ராவத்தூர் ரோட்டில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த கூடுதலாக வேகத்தடைகள் அமைக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சூலுார் அடுத்து ராவத்தூர் கிராமம் உள்ளது. இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்ட இக்கிராமத்தில், 300 க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளன. கோவைக்கு செல்லும் கார்கள், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு செல்லும் டேங்கர் லாரிகள், சூலுார் - ராவத்தூர் ரோட்டில் அதிகம் இயக்கப்படுகின்றன. இந்த ரோட்டில் வளைவுகள் அதிகம் உள்ளதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,'ஆயில் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வரும் கன ரக வாகனங்கள், கோவை நோக்கி செல்லும் கார்கள் இந்த ரோட்டில் அதி வேகமாக இயக்கப்படுகின்றன. அதனால், விபத்துகள் அதிகரித்துள்ளன.
சமீபத்தில் டேங்கர் லாரி மோதி, பெண் ஆசிரியை உயிரிழந்தார். அதனால், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த, வளைவுகளில் கூடுதலாக வேகத்தடைகள் அல்லது பேரிகார்டுகள் அமைக்க வேண்டும். அப்போதுதான் விபத்துகள் குறையும்,' என்றனர்.