/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பொறுப்பேற்பு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பொறுப்பேற்பு
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பொறுப்பேற்பு
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பொறுப்பேற்பு
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பொறுப்பேற்பு
ADDED : ஜூலை 23, 2024 02:00 AM
அன்னுார்;அன்னுார் வட்டார சுகாதார மேற்பார்வையாளராக, சிவக்குமார் பொறுப்பேற்றார்.
அன்னுார் ஒன்றியத்தில், பொகலூரில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமும், செம்மாணி செட்டிபாளையம் மற்றும் மூக்கனுாரில் ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளன.
அன்னுார் வட்டார சுகாதார மேற்பார்வையாளராக கண்ணப்பன் பணியாற்றி வந்தார். இவர் சூலூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இருந்து சிவக்குமார், அன்னுாருக்கு மாற்றப்பட்டு, அன்னுார் வட்டார சுகாதார மேற்பார்வையாளராக பொறுப்பேற்றார். அவருக்கு, அரசு மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.