/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவில்கள் இடிப்பு கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் கோவில்கள் இடிப்பு கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
கோவில்கள் இடிப்பு கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
கோவில்கள் இடிப்பு கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
கோவில்கள் இடிப்பு கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 23, 2024 01:59 AM

பெ.நா.பாளையம்;தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின்பு தொடர்ந்து கோயில்கள் இடிக்கப்படுவதை கண்டித்து, கோவை வடக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில், துடியலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
துடியலூர் பஸ் ஸ்டாண்டில் நடந்த நிகழ்ச்சிக்கு, இந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் உருவை பாலன் தலைமை வகித்தார். மாநில பேச்சாளர் சிங்கை பிரபாகரன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல கோவில்கள் இடிந்த நிலையில், சிதலமடைந்து கிடக்கிறது. பல கோவில்களில் விளக்கு இல்லை, வழிபாடு இல்லை, ஒரு கால பூஜை கூட நடப்பதில்லை. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின்பு, கோவில்கள் இடிக்கப்படுவது அதிகரித்துள்ளது என்று கூறி, தமிழக அரசுக்கு எதிராக இந்து முன்னணியினர் கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டம் நடத்த துடியலூர் போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 210 இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டு, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.