/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குழந்தைகளை விற்ற வடமாநில தம்பதி கைது குழந்தைகளை விற்ற வடமாநில தம்பதி கைது
குழந்தைகளை விற்ற வடமாநில தம்பதி கைது
குழந்தைகளை விற்ற வடமாநில தம்பதி கைது
குழந்தைகளை விற்ற வடமாநில தம்பதி கைது
ADDED : ஜூன் 03, 2024 11:17 PM
சூலூர்;கோவை அருகே பணத்துக்காக குழந்தைகளை விற்ற, வடமாநில தம்பதியை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
கோவை மாவட்டம், சூலூர் அருகே பணத்துக்காக குழந்தைகளை விற்றுள்ளதாக, 'சைல்டு லைன்' அமைப்புக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற நிர்வாகிகள், ஓட்டல் நடத்தி வரும் தம்பதியான பீகார் மாநிலத்தை சேர்ந்த மகேஷ்குமார், 34, அஞ்சலிகுமாரி, 24 ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
அதில், கடந்த ஒரு ஆண்டுக்கு முன், அப்பகுதியில் வேலை செய்த வட மாநிலத்தை சேர்ந்த பெண், தங்களிடம் ஒரு வயது கொண்ட ஆண் குழந்தையை கொடுத்து சென்றதாகவும், அந்த பெண் திரும்பி வராததால், அக்குழந்தையை ஆந்திராவை சேர்ந்த லாரி டிரைவரிடம் விற்றது தெரிந்தது.
மேலும், அவர்கள், ஒரு மாதமே ஆன பெண் குழந்தை ஒன்றை, செலக்கரிச்சலை சேர்ந்த குழந்தையில்லாத தம்பதிக்கு, 2 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளனர்.
அதற்காக, 30 ஆயிரம் ரூபாய் முன் பணமாக வாங்கி உள்ளனர். மீதி பணத்தை கொடுக்க, தம்பதி தாமதம் செய்ததால், குழந்தையை திரும்ப பெற்று சென்றதும் தெரிந்தது. இச்சம்பவங்கள் குறித்து சைல்டு லைன் அமைப்பு நிர்வாகிகள், சூலூர் போலீசாரிடம் புகார் அளித்தனர். தம்பதி மீது இரு வழக்குகள் பதிவு செய்தனர். தம்பதியை கைது செய்த போலீசார், தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.