/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காரணம்பேட்டை மின் வாரிய அலுவலகம்: கரடிவாவியுடன் இணைப்பு காரணம்பேட்டை மின் வாரிய அலுவலகம்: கரடிவாவியுடன் இணைப்பு
காரணம்பேட்டை மின் வாரிய அலுவலகம்: கரடிவாவியுடன் இணைப்பு
காரணம்பேட்டை மின் வாரிய அலுவலகம்: கரடிவாவியுடன் இணைப்பு
காரணம்பேட்டை மின் வாரிய அலுவலகம்: கரடிவாவியுடன் இணைப்பு
ADDED : ஜூன் 03, 2024 11:17 PM
சூலுார்;சூலுார் உப கோட்டத்தின் கீழ் இருக்கும், காரணம்பேட்டை உதவி மின் பொறியாளர் அலுவலகம், கரடிவாவி உபகோட்டத்துடன் நாளை இணைக்கப்பட உள்ளது.
கோவை மின் பகிர்மான கழக ஒண்டிப்புதூர் கோட்ட செயற்பாறியாளர் பழனிசாமி அறிக்கை :
கோவை மாநகர் மின் பகிர்மான வட்டம், ஒணடிப்புதூர் கோட்டம், சூலுார் உப கோட்டத்துக்கு கீழ் செயல்பட்டு வந்த, காரணம்பேட்டை உதவி மின் பொறியாளர் அலுவலகம், காரணம்பேட்டை துணை மின் நிலையம் ஆகியவை, நிர்வாக காரணங்களுக்காக, திருப்பூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட உள்ளது.
நாளை முதல், காரணம் பேட்டை பிரிவு அலுவலகம், பல்லடம் மின் பகிர்மான வட்டம், பல்லடம் கோட்டம் கரடிவாவி உப கோட்டத்துடன் இணைக்கப்பட உள்ளது. எனவே, காரணம்பேட்டை பிரிவு அலுவலகத்தை சார்ந்த மின் நுகர்வோர்கள் மேற்கண்ட அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயன் பெற வேண்டுகிறோம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.