/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பில்லுார் அணையில் புதிய தொழில்நுட்பம் பில்லுார் அணையில் புதிய தொழில்நுட்பம்
பில்லுார் அணையில் புதிய தொழில்நுட்பம்
பில்லுார் அணையில் புதிய தொழில்நுட்பம்
பில்லுார் அணையில் புதிய தொழில்நுட்பம்
ADDED : ஜூலை 10, 2024 08:43 PM

கோவை, நீலகிரி மாவட்ட எல்லையில் பில்லுார் வனப்பகுதியில் பவானி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பில்லுார் அணை, 1966ல் பயன்பாட்டுக்கு வந்தது. மொத்த கொள்ளளவு 1,280 மில்லியன் கன அடி. 1.280 டி.எம்.சி. கொண்டது. அணையின் நீர்மட்ட உயரம், 100 அடி.
மேற்கு தொடர்ச்சி மலையில் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மன்னார்காடு தாலுகாவிலுள்ள பகுதிகளில், 460 சதுர மைல் பரப்பளவு அணையின் நீர்பிடிப்பு பகுதிகள். அணை கட்டி, 58 ஆண்டுகளாகியும் துார்வாரப்படாததால் தற்போது 57 அடிக்கு சேறு, சகதி படிந்துள்ளது.
இதனால், மொத்த கொள்ளளவில் பாதிக்கே தண்ணீர் தேக்க முடிகிறது. பில்லுார் அணையை நம்பியுள்ள கோவை, திருப்பூர் மாநகராட்சிகள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்களுக்கு தங்கு தடையின்றி தண்ணீர் எடுக்க ஏதுவாக, துார் வாரும் பணியை, 'தண்ணீர் இருக்கும்போதே துார் வாரும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி' தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் துவக்கியுள்ளது.
இதற்காக, ஆறு, கடல் முகத்துவாரங்களில் துார் வாரும் 'டிரெஜ்ஜர்' இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. துார் வாரி எடுக்கப்படும் மண், குழாயில் கரைக்கு தள்ளப்படுகிறது. இதற்கான ஆயத்தப்பணிகளின், 'ட்ரோன்' காட்சிகள் தான் இவை.