/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மனைவி, குழந்தைகள் கொலை 'போதை' கணவருக்கு சிறை மனைவி, குழந்தைகள் கொலை 'போதை' கணவருக்கு சிறை
மனைவி, குழந்தைகள் கொலை 'போதை' கணவருக்கு சிறை
மனைவி, குழந்தைகள் கொலை 'போதை' கணவருக்கு சிறை
மனைவி, குழந்தைகள் கொலை 'போதை' கணவருக்கு சிறை
ADDED : ஜூலை 10, 2024 09:22 PM
கோவை:கோவையில் தாய், இரு குழந்தைகள் உயிரிழப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் 'போதை' கணவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கோவை, ஒண்டிப்புதுார், நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் தங்கராஜ், 40, மனைவி புஷ்பா, 38. பெயின்டிங் வேலைக்கு செல்லும் தங்கராஜ், குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். தம்பதியருக்கு ஹரிணி, 9, சிவானி, 3, என இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
புஷ்பா வீட்டு வேலைக்கு சென்று, குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். தங்கராஜ் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக வேலைக்கு செல்லாமல், புஷ்பாவிடம் குடிப்பதற்கு தினமும் பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.
கடந்த, 7ம் தேதி இரவும் இதேபோல் போதையில் தகராறு செய்துள்ளார். மறுநாள் காலையில் புஷ்பாவும், இரு குழந்தைகளும் வீட்டு வளாகத்தில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டனர். மூவரின் உடல்களும், பிரேத பரிசோதனைக்குப் பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
விசாரணையின்போது, முதல் குழந்தையை தண்ணீர் தொட்டிக்குள் தள்ளியதாகவும், குழந்தையை காப்பாற்ற தொட்டிக்குள் இறங்கிய புஷ்பாவை, இரண்டாவது குழந்தையுடன் சேர்த்து தள்ளி, தொட்டியின் மூடியை மூடியதாகவும், தங்கராஜ் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், கொலை மற்றும் தற்கொலைக்கு துாண்டுதல் ஆகிய இரு பிரிவுகளில் தங்கராஜ் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் நேற்று முன்தினம் இரவு அடைக்கப்பட்டார். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.