ADDED : ஜூன் 12, 2024 01:42 AM
கோவை;நேரு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நிறுவனரின், 15வது நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.
இதில், நேரு கல்வி நிறுவனத்தின் செயலர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர் நாகராஜா முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் அனிருதன், நேரு கல்விக் குழுமத்தின் அனைத்து கல்லுாரியின் முதல்வர்கள், டீன்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் கலந்துகொண்டனர்.