/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு வக்கீல் சங்க கூட்டுக்குழு மனு ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு வக்கீல் சங்க கூட்டுக்குழு மனு
ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு வக்கீல் சங்க கூட்டுக்குழு மனு
ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு வக்கீல் சங்க கூட்டுக்குழு மனு
ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு வக்கீல் சங்க கூட்டுக்குழு மனு
ADDED : ஜூன் 12, 2024 01:42 AM
கோவை;இ- பைலிங் வழக்கு தாக்கல் தொடர்பாக, ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு, வக்கீல் சங்க கூட்டுக்குழு சார்பில், கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
நீதிமன்றங்களில் வழக்குகள் நேரடியாக தாக்கல் செய்யப்படுவதற்கு பதிலாக, இ- பைலிங் வாயிலாக தாக்கல் செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட்டது. இப்புதிய முறை துவங்கப்பட்டது முதல், வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பல்வேறு தொடர் போராட்டங்கள் நடத்தியதால், கடந்த 3ம் தேதி வரை, இ-பைலிங் முறை நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது.
கோடை விடுமுறைக்குப் பிறகு, இ- பைலிங் முறை கட்டாயம் பின்பற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், புதிய முறை மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்க கூட்டுக்குழு ஜேக் சார்பில், அதன் தலைவர் நந்தகுமார் மற்றும் நிர்வாகிகள், சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், ' இ- பைலிங் முறையில் வழக்கு தாக்கல் செய்வதில், சர்வர் பிரச்னை, தொழில் நுட்ப கோளாறு உள்ளிட்ட பல்வேறு நடைமுறை சிக்கல் இருப்பதால், வக்கீல்களை கட்டாயப்படுத்தக்கூடாது. நேரடி மற்றும் இ- பைலிங் ஆகிய இரண்டு முறையிலும், வழக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை பின்பற்ற வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.