/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 2 பெண் குழந்தைகளுடன் தாயும் பிணமாக மீட்பு 2 பெண் குழந்தைகளுடன் தாயும் பிணமாக மீட்பு
2 பெண் குழந்தைகளுடன் தாயும் பிணமாக மீட்பு
2 பெண் குழந்தைகளுடன் தாயும் பிணமாக மீட்பு
2 பெண் குழந்தைகளுடன் தாயும் பிணமாக மீட்பு
ADDED : ஜூலை 08, 2024 11:57 PM

கோவை: கோவை, ஒண்டிப்புதுார், நெசவாளர் காலனியை சேர்ந்தவர் தங்கராஜ், 40. இவரது மனைவி புஷ்பா, 38. இந்த தம்பதிக்கு ஹரிணி, 9, ஷிவானி, 3, என இரு பெண் குழந்தைகள் இருந்தனர். குடிப்பழக்கத்துக்கு அடிமையான தங்கராஜ் பெயின்டிங், ஒர்க் ஷாப் என, கிடைக்கும் வேலைக்கு சென்று வந்தார்.
கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக தங்கராஜ் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல், தினமும் குடிப்பதற்கு பணம் கேட்டு புஷ்பாவிடம் தகராறு செய்து வந்தார். புஷ்பா வீட்டு வேலைக்கு சென்று குழந்தைகளை காப்பாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல, குடிப்பதற்கு பணம் கேட்டு சண்டையிட்டார் என கூறப்படுகிறது. நேற்று காலை, அருகே வசிப்பவர்கள் குழந்தைகள் எங்கே என கேட்ட போது, தெரியாது என கூறினார்.
வீட்டு வளாகத்தில் இருக்கும், 10 அடி தண்ணீர் தொட்டியில் குழந்தைகள் மற்றும் மனைவியின் உடல்கள் மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சிங்காநல்லுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
காலை, 7:00 மணிக்கு சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தண்ணீர் தொட்டியில் இருந்து இரு குழந்தைகள் மற்றும் புஷ்பாவின் உடல்களை மீட்டு தங்கராஜிடம் விசாரிக்கின்றனர். மூன்று பேரும் தற்கொலை செய்து கொண்டனரா அல்லது கொலை செய்யப்பட்டனரா என விசாரிக்கின்றனர்.