/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரசியல் மீது நம்பிக்கை போய்விட்டது! ஹிந்து முன்னணி மாநில தலைவர் பேச்சு அரசியல் மீது நம்பிக்கை போய்விட்டது! ஹிந்து முன்னணி மாநில தலைவர் பேச்சு
அரசியல் மீது நம்பிக்கை போய்விட்டது! ஹிந்து முன்னணி மாநில தலைவர் பேச்சு
அரசியல் மீது நம்பிக்கை போய்விட்டது! ஹிந்து முன்னணி மாநில தலைவர் பேச்சு
அரசியல் மீது நம்பிக்கை போய்விட்டது! ஹிந்து முன்னணி மாநில தலைவர் பேச்சு
ADDED : ஜூலை 08, 2024 11:55 PM
ஆனைமலை;''மக்களிடம் அரசியல் மீது நம்பிக்கை போய்விட்டது. இந்த நிலையை மாற்ற வேண்டும்,'' என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பேசினார்.
கோவை தெற்கு மாவட்ட ஹிந்து முன்னணியின், ஆனைமலை மையத்தின் மாவட்ட காரியாலயம் திறப்பு விழா நடந்தது. இதை மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் திறந்து வைத்து பேசியதாவது:
தேர்தல் வந்தால் மற்ற மதத்தினரிடம் ஓட்டு சேகரிக்க, வழிபாட்டு தலங்களை அரசியல் கட்சியினர் தேடிச்செல்கின்றனர். ஆனால், ஹிந்துக்களை தேடி வருவதில்லை. ஓட்டுக்கு பணம் கொடுத்தால் போதும்; கவலைப்பட வேண்டியது இல்லை என்ற மனநிலையில் அரசியல் கட்சியினர் உள்ளனர்.
அரசியல் கட்சியினர், ஓட்டுக்கு பணம் கொடுப்பதால், வெற்றி பெற்ற பின் செலவழித்த பணம் சம்பாதிக்க தோன்றுமா, மக்கள் சேவை செய்ய தோன்றுமா என்பது கேள்வியாகியுள்ளது. மக்களுக்கு, அரசியல் மீது நம்பிக்கை போய்விட்டது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என, ஹிந்து முன்னணி போராடி வருகிறது.
கல்லுாரிகளுக்கு பல கனவுகளுடன் வரும் இளைஞர்கள், போதை பொருட்களுக்கு அடிமையாகிவிடுவதால் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இதை மாற்றவும், போதை பொருட்களுக்கு அடிமையாவதை தடுக்க பாடுபட வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக, சமமாக இருக்க வேண்டும். இந்தியா வல்லரசாக அனைவரும் பாடுபட வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
மாநில செயலாளர் அண்ணாதுரை, கோட்ட செயலாளர்கள் பாலசந்திரன், அசோக்குமார், மாவட்ட துணை தலைவர் சேகர், மாவட்ட செயலாளர் நந்தகுமார், மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.