புகையிலை பொருட்கள் விற்ற மூவர் கைது
பொள்ளாச்சி, மாக்கினாம்பட்டி வி.ஐ.பி., கார்டன் பகுதியில், கிழக்கு போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தது தெரிய வந்தது.
பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
ஆனைமலை அருகே, எட்டித்துரை பகுதியில், போலீசார் ரோந்து சென்றனர். அங்கு தனியார் தோட்டத்தில் பணம் வைத்து சீட்டாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சட்டவிரோதமாக மது விற்றவர் கைது
நெகமம் டாஸ்மாக் மதுக்கடை அருகே, சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக, நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் சந்தேகத்தின் பேரில் அப்பகுதியில் நின்றிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பழனிகுமார், 39, என்பவரிடம் விசாரித்தனர். இதில், பழனிகுமார் மது விற்பனை செய்தது உறுதியானதை தொடர்ந்து, அவரிடம் இருந்து, 21 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.