/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இணை அமைச்சர் முருகன்அன்னூர் வருகை இணை அமைச்சர் முருகன்அன்னூர் வருகை
இணை அமைச்சர் முருகன்அன்னூர் வருகை
இணை அமைச்சர் முருகன்அன்னூர் வருகை
இணை அமைச்சர் முருகன்அன்னூர் வருகை
ADDED : ஜூன் 20, 2024 11:16 PM
அன்னூர்:நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மத்திய இணை அமைச்சர் முருகன் நீலகிரி தொகுதியில், பா.ஜ., சார்பில் போட்டியிட்டார். 2 லட்சத்து 32 ஆயிரம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றார்.
அன்னூர் ஒன்றியத்தில் பெரும்பாலான ஓட்டு சாவடிகளில் பா.ஜ., இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
இந்நிலையில் தகவல் ஒலிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சராக பொறுப்பேற்ற முருகன் நாளை (22ம் தேதி) மாலை 5:00 மணிக்கு அன்னூர் பயணியர் மாளிகை முன்பு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வருகிறார்.
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகிறார். தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக வருவதால் வரவேற்பு ஏற்பாடுகளை அன்னூர் ஒன்றிய பா.ஜ., நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.