/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பயறு வகை பயிரிட்டால் நல்ல வருமானம் பெறலாம் பயறு வகை பயிரிட்டால் நல்ல வருமானம் பெறலாம்
பயறு வகை பயிரிட்டால் நல்ல வருமானம் பெறலாம்
பயறு வகை பயிரிட்டால் நல்ல வருமானம் பெறலாம்
பயறு வகை பயிரிட்டால் நல்ல வருமானம் பெறலாம்
ADDED : ஜூன் 20, 2024 11:16 PM
அன்னுார்:கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில், பசூர் கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு பண்ணை பள்ளி முதல் வகுப்பு நேற்று முன்தினம் நடந்தது. வேளாண் அலுவலர் சுகன்யா தலைமை வகித்து பேசுகையில், பயறு வகைகள் பயிரிட்டால் நல்ல வருமானம் பெறலாம், என்றார்.
காரமடை வேளாண் அறிவியல் நிலையத்தின் சுரேஷ்குமார் பேசுகையில், பயறில் புதிய அதிக விளைச்சல் தரக்கூடிய ரகங்கள் உள்ளன. உரிய பருவத்தில் அவற்றை பயிரிட வேண்டும். விதை நேர்த்தி செய்வதன் வாயிலாக பயிர் விளைச்சல் அதிகரிக்கும், என்றார்.
தேசிய உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகர் மாரியப்பன் பேசுகையில், நுண்ணுயிர் உரங்களை, ரைசோடியம், டிரைகோ டெர்மா விரிடி, அசோஸ்பைரில்லம் போன்றவற்றால் பயிர்கள் நோய் பாதிப்பின்றி அதிக விளைச்சல் தரும், என்றார். உதவி விதை அலுவலர் வினோத்குமார் பேசுகையில், விதைப்பண்ணை அமைத்து வருமானம் பெறலாம், என்றார். ஆதார விதை முதல் சான்று விதை வரையிலான விதைகளின் விபரங்களை எடுத்துக் கூறினார்.
உதவி வேளாண் அலுவலர் பூபாலன், அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரபு, முனுசாமி ஆகியோர் பேசினர். திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.