/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'பெற்றோரையும், படிப்பதையும் நேசியுங்க!' வாழ்க்கையில் உயர அஸ்வின் 'அட்வைஸ் ' 'பெற்றோரையும், படிப்பதையும் நேசியுங்க!' வாழ்க்கையில் உயர அஸ்வின் 'அட்வைஸ் '
'பெற்றோரையும், படிப்பதையும் நேசியுங்க!' வாழ்க்கையில் உயர அஸ்வின் 'அட்வைஸ் '
'பெற்றோரையும், படிப்பதையும் நேசியுங்க!' வாழ்க்கையில் உயர அஸ்வின் 'அட்வைஸ் '
'பெற்றோரையும், படிப்பதையும் நேசியுங்க!' வாழ்க்கையில் உயர அஸ்வின் 'அட்வைஸ் '
ADDED : ஜூலை 06, 2024 11:13 PM

'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில் கல்வி ஆலோசகர் அஸ்வின் பேசியதாவது:
மாணவர்களின் விருப்ப சாய்ஸாக கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளது. இப்பாடத்தை தேர்வு செய்தால் அதிகளவு போட்டியும் நிறைந்துள்ளது. எந்த பாடத்தை தேர்வு செய்தாலும், மாணவர்கள், ஆறு விதமான திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
பிரச்னைக்கு தீர்வு காண்பவராக இருக்க வேண்டும். அடிப்படை குறியீடு திறன், சிந்திக்கும் திறன் உள்ளிட்ட திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதுதான், இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களின் முதல் படியாக உள்ளது.
சிந்தனை, திறமைகளை மேம்படுத்திக் கொண்டால், வாய்ப்புகள் தேடி வரும். உலகில், ஜெயிக்கிறவன், தோற்கிறவன் என இரண்டு விதம் உள்ளனர். ஜெயிப்பவன் பேச்சைத் தான் உலகம் கேட்கும். அதனால், ஜெயிப்பது மட்டுமே குறிக்கோளாக இருக்க வேண்டும்.
தரமான கல்லுாரியை தேர்வு செய்து படித்தால், திறமைகளை மேம்படுத்திக்கொள்ள முடியும். பொருளாதாரத்தில் இந்தியா வளர்ந்து வரும் நாடாக உள்ளது. வரும், 20 ஆண்டுகளுக்கு இந்தியா தான் மற்ற நாடுகளுக்கு வழிகாட்டியாக இருக்கும். இளைஞர்கள் அதிகம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது.
எனவே, இளைஞர்கள் கல்வியோடு திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். படித்தால் தான், வேலை வழங்கும் நிறுவனம் நம்மை தேடி வரும். நமது திறமைகளை வைத்து தான் தேர்வு செய்வர். மத்திய அரசு நிறுவனங்களில் வேலை பெறவும், ஐ.ஐ.டி., என்.ஐ.டி.,யில் உயர்கல்விக்கும், 'கேட்' தேர்வு எழுத வேண்டும். இந்தியன் இன்ஜினியரிங் சர்வீஸ் (ஐ.இ.எஸ்.,) தேர்வை, சிவில், இ.இ.இ., இ.சி.இ., மெக்கானிக் பாடப்பிரிவு முடித்தவர்கள் எழுதலாம்.
நல்ல நிலைக்கு செல்ல வேண்டுமென்றால், ஆசிரியர்களின் 'குட் புக்'கில் இடம் பெற வேண்டும். படிப்பதோடு ஒழுக்கத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும்.
பெற்றோர்கள் தான் நாம் நன்றாக வர வேண்டும் என நினைக்க கூடியவர்; அவர்கள் நமது முன்னேற்றத்துக்காக பாடுபடக்கூடியவர்கள். எனவே, பெற்றோரை மதிக்க வேண்டும்.
நமக்கு கவுரவமே படிப்பு தான்; அதனால், படிக்க வேண்டும் என்பது மட்டுமே இலக்காக இருக்க வேண்டும். பெற்றோரையும், படிப்பதையும் நேசிப்பவரே வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய முடியும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், கவுன்சிலிங், கல்லுாரி தேர்வு குறித்த மாணவர்கள், பெற்றோர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.