/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சரக்கு ஆட்டோ உரிமையாளர் கொலை: சிறுவன் உட்பட மூவர் கைது சரக்கு ஆட்டோ உரிமையாளர் கொலை: சிறுவன் உட்பட மூவர் கைது
சரக்கு ஆட்டோ உரிமையாளர் கொலை: சிறுவன் உட்பட மூவர் கைது
சரக்கு ஆட்டோ உரிமையாளர் கொலை: சிறுவன் உட்பட மூவர் கைது
சரக்கு ஆட்டோ உரிமையாளர் கொலை: சிறுவன் உட்பட மூவர் கைது
ADDED : ஜூலை 06, 2024 11:14 PM

நெகமம்;நெகமம் அருகே, வடசித்தூர் - செட்டிப்பாளையம் ரோட்டில், சரக்கு ஆட்டோ உரிமையாளர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறுவன் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை, சுந்தராபுரத்தை சேர்ந்தவர் பிரபாகரன், 32, சரக்கு ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் இவர், செட்டிபாளையம் - வடசித்தூர் ரோட்டில் பனப்பட்டி பிரிவு அருகே, அவரது வாகனத்தில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு இறந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து, நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
கோவை மாவட்ட எஸ்.பி., பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், பொள்ளாச்சி டி.எஸ்.பி., ஜெயசந்திரன் தலைமையில், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இந்நிலையில், பிரபாகரனின் தங்கையின் கணவர் கோவை போத்தனூரை சேர்ந்த சாதிக்பாட்சா, 36, உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது:
பிரபாகரனின் தங்கையை, சாதிக்பாட்சா காதல் திருமணம் செய்துள்ளார். சில ஆண்டுகளில் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று, கணவன் - மனைவி பிரிந்து வாழ்கின்றனர். இதனால், பிரபாகரனுக்கும், சாதிக்பாட்சாவுக்கும் இடையே விரோதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வேறு பெண்ணை திருமணம் செய்ய சாதிக்பாட்சா முடிவு செய்துள்ளார். திருமணத்துக்கு பிரபாகரனால் இடையூறு ஏற்படும் என கருதிய சாதிக்பாடா, மதுக்கரையை சேர்ந்த தனது நண்பர்களான மணிகண்டன், 24, மற்றும் 17 வயது சிறுவனுடன் சேர்ந்து, கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.
கடந்த-, 5ம் தேதி, திட்டமிட்டவாறு, மணிகண்டனும், சிறுவனும் சேர்ந்து, பிரபாகரனை வாடகைக்கு அழைத்துள்ளனர். ஆட்டோவில் சென்ற போது, பனப்பட்டி அருகே பிரபாகரனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.
இவ்வாறு, போலீசார் கூறினர்.
பிரபாகரனை கொலை செய்ய திட்டமிட்ட சாதிக்பாட்சா, கொலை செய்த மணிகண்டன், சிறுவன் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபின், சிறுவனை அரசு கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பினர். கொலை நடந்த, 12 மணி நேரத்தில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்த போலீசாரை, எஸ்.பி., பாராட்டினார்.