/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்ஜினியரிங் கல்லுாரிகள் தேர்வில் கவனமாக இருங்க! வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு அறிவுரை இன்ஜினியரிங் கல்லுாரிகள் தேர்வில் கவனமாக இருங்க! வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு அறிவுரை
இன்ஜினியரிங் கல்லுாரிகள் தேர்வில் கவனமாக இருங்க! வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு அறிவுரை
இன்ஜினியரிங் கல்லுாரிகள் தேர்வில் கவனமாக இருங்க! வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு அறிவுரை
இன்ஜினியரிங் கல்லுாரிகள் தேர்வில் கவனமாக இருங்க! வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு அறிவுரை
ADDED : ஜூலை 06, 2024 11:12 PM

பொள்ளாச்சி:''மாணவர்கள், 'சாய்ஸ் லிஸ்ட்' தயாரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்,'' என, பொள்ளாச்சி வழிகாட்டி நிகழ்ச்சியில், அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை முன்னாள் இயக்குனர் நாகராஜன் பேசினார்.
அண்ணா பல்கலைக்கழகம் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில் பி.இ., பி.டெக்., முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு சார்பில், 'ஆன்லைனில்' கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதில், பங்கேற்கும் மாணவர்கள், தங்களுக்கு விருப்பமான கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து, 'தினமலர்' நாளிதழ் வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தி வருகிறது.
நடப்பாண்டு, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியுடன் இணைந்து, 'தினமலர்' நாளிதழ், 'டி.என்.இ.ஏ., இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி - 2024' என்ற நிகழ்ச்சியை தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் நடத்துகிறது.
பொள்ளாச்சியில், கோவை ரோட்டில் உள்ள மாதவா இன் ேஹாட்டலில் நேற்று வடிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. கோவை ஸ்ரீஈஸ்வர் பொறியியல் கல்லுாரி மற்றும் கற்பகம் கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்கியது.
அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை முன்னாள் இயக்குனர் நாகராஜன் பேசியதாவது:
இன்ஜினியரிங் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், முதலில் கல்லுாரிகள் 'சாய்ஸ்' பட்டியல் தயாரிக்க வேண்டும். ஒரு கல்லுாரி, ஒரு பாடப்பிரிவு என தேர்வு செய்யாமல், வெவ்வேறு கல்லுாரி, வெவ்வேறு பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய வேண்டும்.
இதற்காக, கல்லுாரிகளை முதலில் தரவரிசைப் படுத்திக் கொண்டு விண்ணப்பிக்கலாம். தற்போது, 2.06 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மூன்று ரவுண்டுகளாக பிரிக்கப்பட்டு கவுன்சிலிங் நடத்தப்படும்.
ஒவ்வொரு ரவுண்டுக்கும் 'ரேங்க்' அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். ரேங்க் போடுவதற்கு முன், கல்லுாரிகள், பாடப்பிரிவுகள் குறித்து மாணவர்களுக்கு, 'புக்லெட்' வழங்கப்படும்.
கல்லுாரிகள், பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய, மூன்று நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும். அவசரப்பட்டு ஒரு நாளில் தேர்வு செய்யாமல், பொறுமையாக சிந்திக்க வேண்டும். மூன்று நாட்களில் மாற்றம் செய்து கொள்ள விரும்பினால் பாடப்பிரிவு, கல்லுாரிகளை மாற்றி விண்ணப்பிக்கலாம். 'லாக்' செய்யும் போது, ஓ.டி.பி., பதிவிட வேண்டும்.
கவுன்சிலிங்கில், கல்லுாரி, பாடப்பிரிவு தேர்வு செய்த பின், அந்த கல்லுாரிக்கு நேரடியாக சென்று கட்டணம் செலுத்தி சேர்ந்து கொள்ள வேண்டும். கவுன்சிலிங் கொடுக்கும் கால இடைவளெியில், தேர்வு செய்த கல்லுாரியில் சேராவிட்டால் அந்த இடம் காலியாகிவிடும். இந்த வாய்ப்பு மற்றொரு மாணவருக்கு செல்லும்.
குறைந்த அளவில் சாய்ஸ் பதிவு செய்பவர்களுக்கு அடுத்தடுத்த கல்லூரிகளில் வாய்ப்பு கிடைக்காமல், அடுத்த சுற்றுக்கு செல்லும் நிலை ஏற்படும். கல்லூரிகளின் பெயர்கள் ஒரே மாதிரியாக இருப்பதால், மாணவர்களுக்கு குழப்பம் ஏற்படும். எனவே, பதிவு எண்களைக் கொண்டு கல்லூரிகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.