/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ திருமூர்த்திமலையில் கார்த்திகை சிறப்பு பூஜை திருமூர்த்திமலையில் கார்த்திகை சிறப்பு பூஜை
திருமூர்த்திமலையில் கார்த்திகை சிறப்பு பூஜை
திருமூர்த்திமலையில் கார்த்திகை சிறப்பு பூஜை
திருமூர்த்திமலையில் கார்த்திகை சிறப்பு பூஜை
ADDED : ஜூன் 05, 2024 09:38 PM

உடுமலை : திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், சுப்ரமணியருக்கு வைகாசி கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.
திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், சுப்ரமணியர் சன்னதியில், முருகனுக்கு உகந்த தினமான, வைகாசி கார்த்திகை தினமான நேற்று சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், நெய் என பல்வேறு திரவியங்களில் சிறப்பு அபிேஷகம் நடந்தது.
தொடர்ந்து, சுப்ரமணியர் சந்தனக்காப்பு, ராஜ அலங்காரத்தில் எழுந்தருளினார். மேலும், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர், சிறப்பு அலங்காரத்தில் திருச்சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
* உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், கார்த்திகையையொட்டி, வெள்ளி தேரில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.