Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 24 மணி நேரமும் 'சரக்கு' விற்பனை அமோகம்; வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்

24 மணி நேரமும் 'சரக்கு' விற்பனை அமோகம்; வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்

24 மணி நேரமும் 'சரக்கு' விற்பனை அமோகம்; வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்

24 மணி நேரமும் 'சரக்கு' விற்பனை அமோகம்; வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்

ADDED : ஜூன் 05, 2024 09:39 PM


Google News
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகரில், சில டாஸ்மாக் மதுக்கடைளில், விதிகளை மீறி 24 மணி நேரம் மதுபாட்டில்கள் விற்பனை செய்தாலும், கண்டறிந்து தடுக்க அதிகாரிகள் முனைப்பு காட்டுவதில்லை.

தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் துறைகளில் 'டாஸ்மாக்' முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை டாஸ்மாக் கடைகள் வாரி குவிக்கிறது.

இந்நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு இணையாக தற்போது, எப்.எல்.,2 என்ற பெயரில் அரசியல் கட்சிக்காரர்களின் தனியார் மதுக்கடைகளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

அவ்வகையில், பொள்ளாச்சி நகரில், டாஸ்மாக் கடை அருகிலேயே, எப்.எல்.,2 தனியார் பார்கள் செயல்படுகின்றன. டாஸ்மாக் கடைகள் பகல், 12:00 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10:00 மணி வரை இயங்க வேண்டும்.

ஆனால், சில கடைகள், இரவு நேரத்தில் அடைக்கப்பட்டிருந்தாலும், அருகே உள்ள பார் வாயிலாக, 24 மணி நேரமும் விற்பனை தொடர்கிறது. இதேபோல, சில தனியார் பார்களில், காலை 6:00 மணிக்கே பிளாக்கில் 'சரக்கு' விற்பனை நடக்கிறது.

குறிப்பாக, பஸ் ஸ்டாண்ட், ஓம்பிரகாஷ் தியேட்டர், ஜமீன்ஊத்துக்குளி உள்ளிட்ட மதுக்கடைகளில் எவ்வித விதியும் பின்பற்றுவது கிடையாது. இங்கு, இரவில், கடைகள் மூடப்படும் நேரத்தில் மதுபாட்டில் வாங்குவோர், கடைகளின் முன்பும், சாலையோரத்தில் அமர்ந்து, மது அருந்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

நேற்று முன்தினம் லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின் போதும், மதுக்கடைகள் மூட உத்தரவிட்டும், மதுபாட்டில்கள் விற்பனை தாராளமாக நடந்தது.

சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

டாஸ்மாக் கடைகள் திறந்து, மூடப்பட்ட பின், விதிமுறைகளை மீறி மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது. மது குடிப்பவர்களின் தொல்லையால், சில வியாபாரிகள் தங்களது கடைகளை, இரவு, 7:00 மணிக்கே மூடிவிட்டு செல்லும் நிலை பஸ் ஸ்டாண்ட்டில் அரங்கேறி வருகிறது.

விதிமீறி செயல்படும் மதுக்கடை பார் மீது கலால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல, பொது இடங்களில் மது அருந்தி, இடையூறு ஏற்படுத்துவோரைக் கண்டறிந்து தடுக்க போலீசார் முனைப்பு காட்ட வேண்டும்.

ஆனால், அரசியல் கட்சியினரின் அத்துமீறலை, அனைத்து அதிகாரிகளும் கைகட்டி வேடிக்கை பார்ப்பது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us