/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விதிமீறி மரங்களில் விளம்பரங்கள்: அப்புறப்படுத்த வலியுறுத்தல் விதிமீறி மரங்களில் விளம்பரங்கள்: அப்புறப்படுத்த வலியுறுத்தல்
விதிமீறி மரங்களில் விளம்பரங்கள்: அப்புறப்படுத்த வலியுறுத்தல்
விதிமீறி மரங்களில் விளம்பரங்கள்: அப்புறப்படுத்த வலியுறுத்தல்
விதிமீறி மரங்களில் விளம்பரங்கள்: அப்புறப்படுத்த வலியுறுத்தல்
ADDED : ஜூன் 15, 2024 12:22 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், நெடுஞ்சாலை ஒட்டியுள்ள பகுதிகளில், ஆபத்தை விளைவிக்கும் வகையிலான தனியார் விளம்பரப் பிளக்ஸ்களை அகற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதி, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள தனியார் இடங்களில், அரசின் முறையான அனுமதியின்றி, விதிகளை மீறி ஏராளமான விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று, ரோட்டோரத்தில் உள்ள மரங்களில் விளம்பர பிளக்ஸ்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்த விளம்பரங்கள், வாகன ஓட்டுநர்களின் கவனத்தை திசை திருப்பி, விபத்துக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளன. அனுமதியின்றி விளம்பர பேனர் அமைக்கக் கூடாது என, மாவட்ட நிர்வாகம் எச்சரித்தும் இத்தகைய விதிமீறல் தொடர்கிறது.
குறிப்பாக, எவ்வித பலமான பிடிப்பும் இன்றி காற்றின் வேகத்தில் பறக்கும் வகையில், விளம்பர பேனர்கள் வைக்கப்படுகின்றன. இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்காத காரணத்தால், நாளுக்கு நாள் புதிய விளம்பரப் பலகைகளும் பெருகி வருகின்றன.
வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது:
தேசிய, மாநில நெடுஞ்சாலை ஓரங்களில், கட்டடங்கள் மட்டுமின்றி மரங்களில் தாங்கிப் பிடிக்கும் வகையில், ஏராளமான விளம்பர பிளக்ஸ்கள் வைக்கப்படுகின்றன. ரோட்டோரங்களில், முக்கிய ரோடுகளின் சந்திப்புகளில் விளம்பர பிளக்ஸ்கள் வைக்கப்பட்டுள்ளன.
காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத பிளக்ஸ்கள், வாகன ஓட்டுநர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளன. விபத்துக்கு வழிவகுக்கும் இத்தகைய விளம்பரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.