/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ புது வீட்டில் சந்தோஷமாக வசிக்கணுமா... பட்ஜெட்டுக்குள் வீடு கட்ட முயற்சியுங்கள்! புது வீட்டில் சந்தோஷமாக வசிக்கணுமா... பட்ஜெட்டுக்குள் வீடு கட்ட முயற்சியுங்கள்!
புது வீட்டில் சந்தோஷமாக வசிக்கணுமா... பட்ஜெட்டுக்குள் வீடு கட்ட முயற்சியுங்கள்!
புது வீட்டில் சந்தோஷமாக வசிக்கணுமா... பட்ஜெட்டுக்குள் வீடு கட்ட முயற்சியுங்கள்!
புது வீட்டில் சந்தோஷமாக வசிக்கணுமா... பட்ஜெட்டுக்குள் வீடு கட்ட முயற்சியுங்கள்!
ADDED : ஜூன் 15, 2024 12:48 AM
ஒரு கட்டுமானத் திட்டத்தில் செலவினங்களைத் துல்லியமாக மதிப்பிடுவது, பட்ஜெட்டுக்குள் இருப்பதற்கான முக்கிய காரணி.
வீடு கட்டும் போது, உங்களிடம் கையிருப்பு எவ்வளவு இருக்கிறது; எவ்வளவு தொகை வங்கியில் கடன் வாங்க வேண்டும் என்று, திட்டமிட்டுக் கொள்ளுங்கள். உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு, கட்டுவதுதான் சிறந்தது.
கடன் கிடைக்கிறதே என்று, தாராளமாக பணம் வாங்கினால், நீங்கள் தான், மாதந்தோறும் தவணை செலுத்த வேண்டும்.
குடும்பத்தின் பராமரிப்புக்கு, இவ்வளவு தொகை செலவாகும் என்று கணித்து தான், வங்கியில் கடன் வழங்கப்படுகிறது. மாதந்தோறும் இவ்வளவு தவணை செலுத்தினால் சரியாக இருக்கும் என்று கருதி, கடன் வாங்க வேண்டும்.
வீட்டில், அலங்காரமான வடிவமைப்பு செலவை அதிகரிக்கும். அலங்கார வடிவமைப்பு நன்றாக இருக்கும் என்று கருதினால், அதற்குரிய வடிவமைப்பாளருடன் ஆலோசித்து, உங்களுக்கு ஏற்றவாறு வடிவமைப்புகளை தேர்ந்தெடுக்கலாம்.
முடிந்தளவுக்கு எளிமையான வடிவமைப்பைத் தேர்ந்தெடுப்பது, உங்கள் வீட்டின் கட்டட செலவை குறைப்பதோடு மட்டுமல்லாமல், வேறு செலவுகளுக்கு தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
நாம் நிர்ணயித்த தொகையை விட, கூடுதல் செலவாவது தவிர்க்க முடியாத ஒன்று. எதிர்பாராத செலவுகளுக்கு என்று, ஒரு தொகையை ஒதுக்கி வைப்பது நல்லது.
மர தரைதளம் பதிக்க ஆசையாகதானிருக்கும். ஆனால், செலவு கொஞ்சம் அதிகமாகும். அதை விடுத்து, டைல்ஸ் பதிப்பதில் கவனம் செலுத்தலாம்.
அதே போல், மறுசுழற்சி செய்யப்பட்ட ஸ்டீல், சிமென்ட் கலப்பு பலகைகள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
இயந்திரங்கள் மற்றும் கருவிகளை, வாடகைக்கு எடுப்பது அல்லது வாங்குவது மற்றும் பராமரிப்பது போன்றவற்றிற்கான செலவுகளை, நீங்கள் நிர்ணயித்த பட்ஜெட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
கையில் தொகை இருக்கிறது என்பதற்காக, தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது, எல்லாவற்றையும் விட சிறந்தது.