Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கட்டுமான பொறியாளரை தேர்வு செய்வதில் கவனம் வேண்டும்

கட்டுமான பொறியாளரை தேர்வு செய்வதில் கவனம் வேண்டும்

கட்டுமான பொறியாளரை தேர்வு செய்வதில் கவனம் வேண்டும்

கட்டுமான பொறியாளரை தேர்வு செய்வதில் கவனம் வேண்டும்

ADDED : ஜூன் 15, 2024 01:17 AM


Google News
நீங்கள் வீடு கட்ட நினைக்கிறீர்கள் என்றால், முதலில் உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற, சரியான, சிறந்த கட்டுமான வல்லுனரை தேர்ந்தெடுக்க வேண்டும். ​​

உள்ளூரில் அனுபவமுள்ள ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்கள் மேற்கொண்ட கட்டுமானங்களை, ஆய்வு செய்வது சிறந்தது. தேர்ந்தெடுக்கும் கட்டுமான வல்லுனரிடம், உங்கள் தேவைகளையும், கையிருப்பையும் தெரிவித்து விட வேண்டும்.

நீங்கள் கட்ட விரும்பும் வீட்டின் வகை, நீங்கள் தேர்ந்தெடுக்கும் வடிவமைப்பு மற்றும் உங்களுக்குத் தேவையான அம்சங்களை, மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் கருத்தைப் புரிந்துகொண்டு, அதை சிறப்பாக மாற்றக்கூடிய ஒரு பொறியாளருடன் பணியாற்ற வேண்டும்.

பொறியாளரின் தகவல் தொடர்புத் திறன், வரவு செலவுத் திட்டத்தில் இருக்கக்கூடிய திறன் மற்றும் காலக்கெடுவைச் சந்திக்கும் திறன் ஆகியவற்றை, முழுவதுமாக ஆராய்வது நல்லது.

நம்முடைய நிலையை புரிந்து கொள்ளக் கூடியவராக, நம்பகமான மற்றும் உயர்தரமான பணிகளை உருவாக்கும் திறன் கொண்டவராக, அவர் இருக்க வேண்டும்.​​

உங்கள் பட்ஜெட்டை அவர் மனதில் வைத்துக்கொள்வது அவசியம். அதற்கேற்ப கட்டணங்களைப் பற்றிய, தெளிவான மதிப்பிடல், ஆவணங்களை பெற்றுக் கொள்ள வேண்டும். உங்கள் வரவு, செலவுகளை பற்றி ஆலோசிக்கும் போது, கட்டுமானப் பணியின் போது ஏற்படும் எதிர்பாராத செலவினங்களைப் பற்றியும் கேட்க வேண்டும்.

உங்கள் ஒட்டுமொத்த பட்ஜெட் மற்றும் அவர் வசூலிக்கும் கட்டணம் ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். முக்கியமாக, உங்களுக்கும், பொறியாளருக்கும் இடையே சுமூக நல்லுறவு அவசியம். மனஸ்தாபம் ஏற்பட்டு விடக்கூடாது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us