/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மின் இணைப்பு பிரச்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம் மின் இணைப்பு பிரச்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மின் இணைப்பு பிரச்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மின் இணைப்பு பிரச்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மின் இணைப்பு பிரச்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 20, 2024 05:48 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, அங்கலக்குறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, உடுமலை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் செயலாளர் ஜெகதீஸ் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், தனிப்பட்டாவுக்கு உரிமைச் சான்று தேவை இல்லையென, வருவாய்த்துறை தெரிவித்துள்ளது. அதேபோல், கோர்ட்டும் தனிப்பட்டாவுக்கு உரிமைச் சான்று அவசியமில்லை என, தெரிவித்துள்ளது. இவ்வாறு, இருக்கையில் உரிமைச் சான்று இருந்தால் மட்டுமே தனிப்பட்டாவுக்கு, மின் இணைப்பு வழங்கப்படும் என, தெரிவிக்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் பாதிக்கின்றனர்.
இதற்கு, தீர்வு கிடைக்காவிடில், ஜூலை 3ம் தேதி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்துடன் இணைந்து, உடுமலை மின்பகிர்மான வட்ட அலுவலகத்தில் போராட்டம் நடத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, மேற்பார்வை பொறியாளரிடம் மனுவும் அளிக்கப்பட்டது.