/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குப்பை கிடங்கில் சூரியஒளி மின் உற்பத்தி நிலையம் ரூ.150 கோடியில் அமைக்க மாநகராட்சி திட்டம் குப்பை கிடங்கில் சூரியஒளி மின் உற்பத்தி நிலையம் ரூ.150 கோடியில் அமைக்க மாநகராட்சி திட்டம்
குப்பை கிடங்கில் சூரியஒளி மின் உற்பத்தி நிலையம் ரூ.150 கோடியில் அமைக்க மாநகராட்சி திட்டம்
குப்பை கிடங்கில் சூரியஒளி மின் உற்பத்தி நிலையம் ரூ.150 கோடியில் அமைக்க மாநகராட்சி திட்டம்
குப்பை கிடங்கில் சூரியஒளி மின் உற்பத்தி நிலையம் ரூ.150 கோடியில் அமைக்க மாநகராட்சி திட்டம்
ADDED : ஜூன் 20, 2024 05:47 AM
கோவை, : வெள்ளலுார் குப்பை கிடங்கில், 25 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் அமைக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் தெருவிளக்குகளுக்கான மின்கட்டணம், பெரும் சுமையை ஏற்படுத்தி வருகிறது. மாநகராட்சியின், 100 வார்டுகளில் தெருவிளக்குகளுக்கு மின்சார கட்டணமாக மாநகராட்சி மாதந்தோறும் ரூ.10 கோடி செலுத்தி வருகிறது. இதை குறைக்க, மாநகராட்சி நிர்வாகம் சூரிய ஒளி மின்சார திட்டத்தை, செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே கவுண்டம்பாளையத்தில், 5 மெகாவாட் உற்பத்தி திறனுடன் கூடிய சூரியஒளி மின் உற்பத்தி மையம் செயல்பட்டு வருகிறது. தற்போது, புதிதாக வெள்ளலூர் குப்பைக்கிடங்கில், ரூ.150 கோடியில் சூரிய ஒளி மின்உற்பத்தி மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது
கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறியதாவது:
கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில், 50 ஏக்கரில் சூரியஒளி மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த நிலையம் வாயிலாக, 25 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
இம்மின்சாரம், கோவை போத்தனூரில் உள்ள துணை மின்நிலையத்துக்கு வழங்கப்படும். அதற்கு ஈடாக தெருவிளக்கு மின்சார கட்டணம் சரி செய்யப்பட உள்ளது.
இத்திட்டத்துக்கான வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு, விரைவில் தமிழக அரசின் ஒப்புதல் பெற்று பணிகள் துவங்கப்பட உள்ளன.
இதுதவிர, வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் சேரும், 600 டன் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டமும், வருங்காலத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
வெள்ளலூர் குப்பைக்கிடங்கை தரம் உயர்த்தவும், நவீன எந்திரங்கள் பொருத்தவும் ரூ.245 கோடியில் புதிய திட்டவரைவு தயாரிக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.