/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வேளாண் பல்கலையில் முதுநிலை, முனைவர் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு வேளாண் பல்கலையில் முதுநிலை, முனைவர் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு
வேளாண் பல்கலையில் முதுநிலை, முனைவர் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு
வேளாண் பல்கலையில் முதுநிலை, முனைவர் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு
வேளாண் பல்கலையில் முதுநிலை, முனைவர் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு
ADDED : ஜூன் 24, 2024 12:33 AM

கோவை;தமிழ்நாடு வேளாண் பல்கலையில், 2024---25ம் ஆண்டுக்கான முதுநிலை, முனைவர் பட்டப் படிப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு, நேற்று நடைபெற்றது.
வேளாண் பல்கலை முதுகலைப் பிரிவு, 11 தொகுப்புக் கல்லூரிகளில் 33 முதுகலை, 28 முனைவர் பட்டப் படிப்பை வழங்குகிறது.
இந்த ஆண்டு முதுநிலைப் படிப்புகளுக்கு மொத்தம் 2,330 விண்ணப்பதாரர்களும், முனைவர் பட்டப் படிப்புகளுக்கு, 380 மாணவர்களும் விண்ணப்பித்து, நேற்று நடந்த முதுகலை நுழைவுத் தேர்வில் பங்கேற்றனர்.
தமிழக மாணவர்கள் உட்பட, மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
தேர்வு நடக்கும் அரங்குகளைக் கண்டறிய, கூகுள் வரைபடத்துடன் இணைக்கப்பட்ட கியூஆர் குறியீடு உருவாக்கப்பட்டிருந்தது. இது, பெற்றோர், மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
முதுகலை பட்ட மேற்படிப்பு பயிலக முதன்மையர் செந்தில், வேளாண் முதன்மையர் வெங்கடேச பழனிசாமி, வேளாண் பொறியியல் முதன்மையர் ரவிராஜ், துணைவேந்தர் கீதாலட்சுமி தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களை வாழ்த்தினர். இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கான சேர்க்கை, செப்.,ல் நடைபெற உள்ளது.