/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'டெக்ஸ்பேர் 2024' கண்காட்சி இன்று நிறைவு 'டெக்ஸ்பேர் 2024' கண்காட்சி இன்று நிறைவு
'டெக்ஸ்பேர் 2024' கண்காட்சி இன்று நிறைவு
'டெக்ஸ்பேர் 2024' கண்காட்சி இன்று நிறைவு
'டெக்ஸ்பேர் 2024' கண்காட்சி இன்று நிறைவு
ADDED : ஜூன் 24, 2024 12:33 AM
கோவை:ஜவுளி இயந்திரங்கள், உதிரி பாகங்கள், உபகரணங்கள் கண்காட்சியான 'டெக்ஸ்பேர் 2024' இன்று நிறைவு பெறுகிறது.
கோவை அவிநாசி ரோட்டில் உள்ள கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) சார்பில், இக்கண்காட்சி நடத்தப்படுகிறது.
தென் மாநில அளவில் ஜவுளித்தொழிலில், முன்னணி வகிக்கும் தமிழ்நாட்டில் 14வது பதிப்பாக இக்கண்காட்சி நடக்கிறது. ஜவுளித் தொழிலுக்கு தேவையான இயந்திரங்கள், உதிரி பாகங்கள், உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை நடக்கும் இந்த கண்காட்சி, இன்று நிறைவு பெறுகிறது. அனுமதி இலவசம். ஈரோடு, சேலம், மதுரை, திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களிலிருந்து, அதிக பார்வையாளர்கள் வந்திருந்தனர்.
சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் வணிகர்கள் டெக்ஸ்பேர் கண்காட்சியை பார்வையிட்டனர்.