/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தேசிய அளவிலான விளையாட்டு போட்டி ;மாணவிகளுக்கு முதல்வரின் சான்றிதழ் தேசிய அளவிலான விளையாட்டு போட்டி ;மாணவிகளுக்கு முதல்வரின் சான்றிதழ்
தேசிய அளவிலான விளையாட்டு போட்டி ;மாணவிகளுக்கு முதல்வரின் சான்றிதழ்
தேசிய அளவிலான விளையாட்டு போட்டி ;மாணவிகளுக்கு முதல்வரின் சான்றிதழ்
தேசிய அளவிலான விளையாட்டு போட்டி ;மாணவிகளுக்கு முதல்வரின் சான்றிதழ்
ADDED : ஜூன் 24, 2024 12:32 AM

கோவை:தேசிய அளவிலான எஸ்.ஜி.எப்.ஐ., விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற சி.எம்.எஸ்., பள்ளி மாணவர்களுக்கு, முதல்வரின் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்திய பள்ளிகளில் விளையாட்டு குழுமம் (எஸ்.ஜி.எப்.ஐ.,) சார்பில், பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இப்போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கு, பல்வேறு மாவட்டங்களில் தேர்வு நடத்தப்பட்டன. அதிலிருந்து, சிறந்த வீரர் - வீராங்கனையினர் தேசிய போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இந்த வரிசையில், இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் சார்பில், 67வது தேசிய விளையாட்டு போட்டிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்தன.
இதில் தடகளம், இறகுப்பந்து, வூசூ, சைக்கிளிங், கராத்தே, கூடைப்பந்து, வாலிபால், கோ கோ, செஸ், சாப்ட்பால், டென்னிஸ், டேக்வாண்டோ, தாங்டா, ஸ்குவாஷ், ஸ்கேட்டிங் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் சி.எம்.எஸ்,. பள்ளி பிளஸ் 2 மாணவி தியா, 200 மீட்டர் ஓடத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதேபோல், பிளஸ் 2 மாணவி நிவேதா தொடர் ஓட்டத்தில் வெண்கலமும் வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு, சென்னையில் நடந்த விழாவில் முதல்வரின் பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
தேசிய போட்டியில் வென்று, முதல்வரின் பாராட்டு சான்றிதழ் பெற்ற மாணவியரை சி.எம்.எஸ்., பள்ளி தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் ராஜகோபாலன், பள்ளி முதல்வர் ஸ்ரீபிரியா மற்றும் நிர்வாகிகள், ஆசிரியர்கள் பாராட்டினர்.