Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நீர் பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு

நீர் பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு

நீர் பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு

நீர் பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு

ADDED : ஜூன் 20, 2024 11:19 PM


Google News
Latest Tamil News

--நிருபர் குழு-


நீர் பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாக கோவை புறநகர் பகுதியில் நடந்த ஜமா பந்தியில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன.

அன்னுார்


அன்னுார் அருகே அல்லப்பாளையம் விவசாயிகள், ஜமாபந்தியில் அளித்த மனுவில்,' அன்னூர் தாலுகாவில் 30 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. நிலத்தை வளப்படுத்துவதற்கு பவானிசாகர் நீர் தேக்கத்தை ஒட்டி கோவை மாவட்ட எல்லையில் வண்டல் மண் எடுக்க அனுமதி தராமல் தாமதிக்கின்றனர்.

அன்னூர் தாலுகா விவசாயிகளும், பவானிசாகர் நீர் தேக்கத்தின் கோவை மாவட்ட எல்லை பகுதியில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

கணேசபுரம் மக்கள் வார்டு உறுப்பினர் சுகுணபிரியா உள்ளிட்டோர் அளித்த மனுவில்,' கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலையில் கணேச புரத்தில் மழை நீர் செல்லும் நீர்வழிப் பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ., ஒன்றிய கவுன்சிலர் ஜெயபால் அளித்த மனுவில்,' காரே கவுண்டம்பாளையம் ஊராட்சியில் 500 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் சுரேஷ் மனுக்களை பெற்றுக் கொண்டார். தாசில்தார் நித்தில வள்ளி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

மேட்டுப்பாளையம்


மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். கலெக்டர் அலுவலகப் பொது மேலாளர் மகேஷ் குமார் தலைமையில், 10க்கும் மேற்பட்ட அலுவலர்கள், நான்கு கிராமங்களின் வருவாய் தீர்வாய கணக்குகளை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஜமாபந்தியில் மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன், தலைமையிட துணை தாசில்தார் செல்வராஜ், தனி தாசில்தார்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.

பெ.நா.பாளையம்


பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நாயக்கன்பாளையம் ஊராட்சி, மேற்கு மலை தொடர்ச்சி அடிவாரத்தில் உள்ளது. பருவ மழை காலங்களில் மலைப்பகுதியில் பெய்யும் மழை நீர், வெள்ளமென பெருகி இந்த ஊராட்சிக்கு உட்பட்ட குளம், குட்டைகளை நிறைக்கிறது. இதனால் நிலத்தடி நீர் பெருகி விவசாயம் செழிக்கிறது.

ஆனால், நாயக்கன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட நீர் பிடிப்பு பகுதிகளில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் பருவ மழை காலங்களில் குளம், குட்டைகளில் நீர் தேங்குவது தடுக்கப்படுகிறது.

இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காண குளம், குட்டைகள், நீர்வரத்து பள்ளவாரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய் துறை வாயிலாக அளவீடு செய்து, அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நாயக்கன்பாளையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சின்னராஜ், கோவை வடக்கு தாலுகா ஜமாபந்தியில் கோவை வடக்கு கோட்டாட்சியர் கோவிந்தனிடம் மனு அளித்தார்

சூலுார்


சூலூர் தாலுகாவில் நேற்று காலை, 10:00 மணிக்கு ஜமா பந்தி துவங்கியது. மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். கருமத்தம்பட்டி உள்வட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள், 249 மனுக்களை அளித்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி கூறுகையில், கோவை மாவட்டத்தில் மாசடைந்த குடிநீரால் மக்கள் வாந்தி, வயிற்று போக்கு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவ மழை துவங்க உள்ள நிலையில் நீர் நிலைகளை தூர் வார வேண்டும்.

சூலூர் வட்டாரத்தில் தெரு நாய்கள் தொந்தரவு அதிகரித்துள்ளது. கால்நடைத்துறை யினர் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். தாசில்தார் தனசேகர், தலைமையிடத்து துணை தாசில்தார், மண்டல தாசில்தார் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

ஜமாபந்தியில் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், தொகுப்பு வீடுகள், சாலை வசதி, சாக்கடை வசதி, மகளிர் உரிமைத் தொகை, நில அளவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் அளிக்கப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us