/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ எண்ணெய் நிறுவனத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்; அதிகாரிகளிடம் மனு எண்ணெய் நிறுவனத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்; அதிகாரிகளிடம் மனு
எண்ணெய் நிறுவனத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்; அதிகாரிகளிடம் மனு
எண்ணெய் நிறுவனத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்; அதிகாரிகளிடம் மனு
எண்ணெய் நிறுவனத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்; அதிகாரிகளிடம் மனு
ADDED : ஜூன் 20, 2024 11:20 PM

சூலூர்;விளை நிலங்கள் வழியாக பெட்ரோல் கொண்டும் செல்லும் திட்டத்தை கைவிட்டு, நெடுஞ்சாலை ஓரமாக குழாய்களை பதிக்கக்கோரி, எண்ணெய் நிறுவனத்தை முற்றுகையிட்டு, அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் இருகூரில் இருந்து பெங்களூர் வரை குழாய் மூலம் பெட்ரோல் கொண்டு செல்லும் திட்டத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
இதில், ஈரோடு மாவட்டம் முத்தூர் வரை விளைநிலங்களில் குழாய் பதிக்கும் பணியை நிறுவனம் மேற்கொண்டது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில், நிறுவனம் சார்பில் விவசாயிகளிடம் இழப்பீட்டு தொகையை பெற்றுக்கொள்ள நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ஆவேசமடைந்த, 500க்கும் மேற்பட்ட விவசாயிகள், நேற்றுக் காலை ராவத்தூரில் உள்ள பாரத் பெட்ரோலிய சேமிப்பு கிடங்கை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். அங்கிருந்த அதிகாரிகளிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் முருகசாமி, சண்முகசுந்தரம், ரவிக்குமார் ஆகியோர் கூறுகையில்,'கடந்த பல வருடங்களுக்கு முன் விளைநிலங்கள் வழியாக குழாய் பதிக்கப்பட்டதால், ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். தற்போது மீண்டும், புதிய குழாய்கள் பதிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.
இருகூர் முதல் முத்தூர் வரை நெடுஞ்சாலை ஓரமாக குழாய் பதிக்கவேண்டும், என்பதே எங்கள் கோரிக்கை. அதை அதிகாரிகள் ஏற்க மறுக்கின்றனர். எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம்' என்றனர்.