/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'பெட்ரோமாக்ஸ் லைட்டே' தான் வேணுமா! வேலை கிடைத்தால் இளைஞர்கள் 'ஓட்டம்' 'பெட்ரோமாக்ஸ் லைட்டே' தான் வேணுமா! வேலை கிடைத்தால் இளைஞர்கள் 'ஓட்டம்'
'பெட்ரோமாக்ஸ் லைட்டே' தான் வேணுமா! வேலை கிடைத்தால் இளைஞர்கள் 'ஓட்டம்'
'பெட்ரோமாக்ஸ் லைட்டே' தான் வேணுமா! வேலை கிடைத்தால் இளைஞர்கள் 'ஓட்டம்'
'பெட்ரோமாக்ஸ் லைட்டே' தான் வேணுமா! வேலை கிடைத்தால் இளைஞர்கள் 'ஓட்டம்'
ADDED : ஜூன் 20, 2024 04:49 AM
கோவை, : வேலை வாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்படும் தனியார் வேலை வாய்ப்பு முகாமில், பணி வாய்ப்பு பெறும் இளைஞர்கள் பெரும்பாலானோர், சில மாதங்களில் அந்த வேலையை விட்டு செல்வது அதிகரித்துள்ளது.
வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகத்தில், மாதத்தில் மூன்றாவது வெள்ளிக்கிழமை, சிறியளவில் தனியார் வேலை வாய்ப்பு முகாம், நீண்டகாலமாக நடத்தப்படுகிறது.
தவிர, தமிழக அரசின் உத்தரவுப்படி, 2017ம் ஆண்டு முதல், தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகம் சார்பில், ஆங்காங்கே உள்ள கல்லுாரிகளில், ஆண்டுக்கு இருமுறை 'மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்' நடத்தப்படுகிறது.
தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான நபர்களை, தனியார் நிறுவனத்தினர் அங்கேயே தேர்ந்தெடுக்கின்றனர். பணிக்கு சேர்ந்த நபர்களை, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர்கள், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தொடர்பு கொண்டு, 'வேலையில் சேர்ந்தீர்களா... வேலை பிடித்திருக்கிறதா... முறையான வசதிகள் வழங்கப்படுகிறதா...' உட்பட பல கேள்விகளை கேட்டு தகவல் சேகரிப்பது வழக்கம்.
அதிகாரிகளுக்கு அதிர்ச்சி
கடந்த சில ஆண்டுகளாக, இதுபோன்ற தகவல்களை கேட்க போன் செய்யும் அதிகாரிகளுக்கு, அதிர்ச்சி தான் காத்திருக்கிறது. பணியில் சேர்ந்த பெரும்பாலான இளைஞர்கள், சில மாதங்களிலேயே அந்த வேலையை விட்டு வெளியேறி விடுகின்றனர் என்பது தான், அதிர்ச்சிக்கு காரணம்.
கோவையில், கடந்தாண்டு ஒரு கல்லுாரியில் நடத்த முகாமில், பல தனியார் நிறுவனங்கள் சார்பில், 1,200 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணியும் வழங்கப்பட்டது.
மூன்று மாதங்கள் கழித்து, மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரிகள், இவர்களை தொடர்பு கொண்ட போது, வெறும் 30 பேர் தான், பணியில் தொடர்வதாக தகவல் கிடைத்துள்ளது.
அதிகாரிகள் சிலர் கூறியதாவது: ஒரு பணியில் சேர்கிறோம் என்றால், அதைப்பற்றி தெரிந்து, கற்றுக்கொள்ள சில மாதங்கள் பிடிக்கும்.
ஒரு தொழில் துவங்க வேண்டும் என்றால், எந்த துறையில் கால் பதிக்கிறீர்களோ அதை முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், ஏமாற நேரிடும். ஆனால், பெரும்பாலானோர், தங்களுக்கு பிடித்த, எந்த தொந்தரவும் இல்லாத வேலையை தேடுகின்றனர் என்றுதான் எண்ண தோன்றுகிறது.
இப்படியே கிடைக்கிற வேலையில், அடிக்கடி மாறிக்கொண்டே இருந்தால், ஒரு தொழிலையும் முழுவதுமாக கற்றுத்தேர முடியாது. கிடைக்கும் வேலையில் திறமையை மெருகேற்றிக்கொண்டு உயர்வதுதான் புத்திசாலித்தனம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.