/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரசு பொருட்காட்சியில் ரூ.14.5 லட்சம் வருவாய் அரசு பொருட்காட்சியில் ரூ.14.5 லட்சம் வருவாய்
அரசு பொருட்காட்சியில் ரூ.14.5 லட்சம் வருவாய்
அரசு பொருட்காட்சியில் ரூ.14.5 லட்சம் வருவாய்
அரசு பொருட்காட்சியில் ரூ.14.5 லட்சம் வருவாய்
ADDED : ஜூன் 20, 2024 04:49 AM
கோவை, : கோவை வ.உ.சி., மைதானத்தில் நடைபெற்று வரும் அரசுப் பொருட்காட்சி வாயிலாக கடந்த இருபது நாட்களில், அரசுக்கு ரூ.14.52 லட்சம் வருவாயாக கிடைத்துள்ளது.
செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் கடந்த மே 25 முதல் அரசு பொருட்காட்சி நடந்து வருகிறது. இப்பொருட்காட்சியில், மொத்தம் 34 அரசுத்துறை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. பொருட்காட்சியை காண வரும் பெரியவர்களுக்கு 15 ரூபாயும், சிறியவர்களுக்கு 10 ரூபாயு-ம், நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
நேற்று முன் தினம் வரை, 20 நாட்களில் அரசுப் பொருட்காட்சியினை, மொத்தம் 1,03,393 பேர் பார்வையிட்டுள்ளனர். 14,52,515 ரூபாய்- அரசுக்கு வருவாயாக கிடைத்துள்ளது.