/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தேசிய 'ரக்பி' போட்டிக்கு தமிழக அணி வீரர்கள் ரெடி தேசிய 'ரக்பி' போட்டிக்கு தமிழக அணி வீரர்கள் ரெடி
தேசிய 'ரக்பி' போட்டிக்கு தமிழக அணி வீரர்கள் ரெடி
தேசிய 'ரக்பி' போட்டிக்கு தமிழக அணி வீரர்கள் ரெடி
தேசிய 'ரக்பி' போட்டிக்கு தமிழக அணி வீரர்கள் ரெடி
ADDED : ஜூன் 20, 2024 04:48 AM

கோவை : மகாராஷ்டிராவில் நடக்கும், தேசிய அளவிலான ஜூனியர் ரக்பி போட்டிக்காக, தமிழக அணி வீரர்கள் பயிற்சி முகாம், கோவையில் நடக்கிறது.
தேசிய அளவிலான ஜூனியர் மற்றும் சீனியர் ஆண்கள், பெண்கள் ரக்பி சாம்பியன்ஷிப் போட்டி, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடக்கிறது. இப்போட்டியில், 28 மாநிலங்களில் இருந்து 1300க்கும் மேற்பட்ட, வீரர் - வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதன், 18 வயதுக்கு உட்பட்ட ஜூனியர் ஆண்களுக்கான போட்டி வரும், 25ம் தேதி முதல் துவங்குகிறது. இதில் பங்கேற்கும் தமிழக அணிக்கான பயிற்சி முகாம், மலுமிச்சம்பட்டி இந்துஸ்தான் இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில், நான்கு நாட்கள் நடக்கிறது.
முகாமை கல்லுாரி செயலாளர் சரஸ்வதி, முதன்மை செயல் அதிகாரி கருணாகரன், கோவை மாவட்ட ரக்பி சங்க செயலாளர் ரவிச்சந்திரன், உடற்கல்வி இயக்குனர் ரவிக்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
முகாமில், 18 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். நான்கு நாட்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீரர்கள், புனேவில் 25ம் தேதி துவங்கும், தேசிய போட்டியில் தமிழக அணி சார்பில் களமிறங்குகின்றனர்.