/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவைக்கான திட்டம் இல்லை தி.மு.க., - ம.தி.மு.க., வருத்தம் கோவைக்கான திட்டம் இல்லை தி.மு.க., - ம.தி.மு.க., வருத்தம்
கோவைக்கான திட்டம் இல்லை தி.மு.க., - ம.தி.மு.க., வருத்தம்
கோவைக்கான திட்டம் இல்லை தி.மு.க., - ம.தி.மு.க., வருத்தம்
கோவைக்கான திட்டம் இல்லை தி.மு.க., - ம.தி.மு.க., வருத்தம்
ADDED : ஜூலை 24, 2024 01:02 AM
கோவை:கோவை எம்.பி., ராஜ்குமார் (தி.மு.க.,): தமிழகத்துக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட். கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிதி ஒதுக்கீடு, 'டிபென்ஸ் காரிடர்' மேம்பாடு, கோவை மெட்ரோவுக்கு நிதி ஒதுக்கீடு, தொழில் வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க., கோவை மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக்: கோவை தொழில்துறைக்காக மத்திய அமைச்சர்கள், பா.ஜ., தலைவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
ம.தி.மு.க., மாநகர் மாவட்ட செயலாளர் செல்வராஜ்: மாற்றந்தாய் மனப்பான்மையில் மத்திய அரசு செயல்பட்டு இருக்கிறது. பா.ஜ., ஆட்சி செய்யாத மாநிலங்களுக்கு திட்டங்கள் அறிவிக்காதது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.