ADDED : ஜூலை 24, 2024 01:03 AM

கோவை:போக்சோ வழக்கில், கூலி தொழிலாளிக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கோவை மாவட்டம், அன்னுார் பகுதியை சேர்ந்தவர் சம்பத்,57; கூலி தொழிலாளியான இவர், 2021 ல், மூன்று வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தார். புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ், சம்பத்தை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இவர் மீது, கோவையிலுள்ள முதன்மை போக்சோ சிறப்பு கோர்ட்டில், வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி குலசேகரன், குற்றம் சாட்டப்பட்ட சம்பத்திற்கு, 20 ஆண்டு சிறை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று தீர்ப்பளித்தார்.