/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மீன் மார்க்கெட்டை காலி செய்யுங்கள் அமைச்சருக்கு வானதி வலியுறுத்தல் மீன் மார்க்கெட்டை காலி செய்யுங்கள் அமைச்சருக்கு வானதி வலியுறுத்தல்
மீன் மார்க்கெட்டை காலி செய்யுங்கள் அமைச்சருக்கு வானதி வலியுறுத்தல்
மீன் மார்க்கெட்டை காலி செய்யுங்கள் அமைச்சருக்கு வானதி வலியுறுத்தல்
மீன் மார்க்கெட்டை காலி செய்யுங்கள் அமைச்சருக்கு வானதி வலியுறுத்தல்
ADDED : ஜூலை 24, 2024 01:02 AM
கோவை:உக்கடம் சி.எம்.சி., காலனி மக்களுக்கான குடியிருப்பு அமைக்க, மீன் மார்க்கெட்டை காலி செய்து, நிலத்தை குடிசை மாற்று வாரியத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, அமைச்சர் நேருவுக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:
கோவை, உக்கடம் சி.எம்.சி.,காலனியில் தூய்மைப் பணியாளர்கள் வசித்து வந்தனர். 2018ல், உக்கடம் மேம்பாலம் அமைக்க, சி.எம்.சி., காலனி மக்களின் இடம் பெறப்பட்டது. மாற்றாக, அப்பகுதி மீன் மார்க்கெட்டை அப்புறப்படுத்தி, 18 மாதங்களில் 520 வீடுகள் கட்டித் தரப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.
நான்கு ஆண்டுகள் ஆகியும், மீன் மார்க்கெட்டை அப்புறப்படுத்தாததால், மக்கள் வீடின்றி அவதிப்படுகின்றனர். எனவே, உடனடியாக மீன்மார்க்கெட்டை அப்புறப்படுத்தி, அந்த இடத்தை, குடிசை மாற்று வாரியத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, வானதி தெரிவித்துள்ளார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, மாநகராட்சி கமிஷனருக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில், 'அரசே மக்களை ஏமாற்றக் கூடாது. வாக்குறுதி கொடுக்கப்பட்ட அதே இடத்தில், அவர்களுக்கு குடியிருப்பு அமைத்துக் கொடுக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.