ADDED : ஜூலை 09, 2024 11:29 PM

கோவை:சவுரிபாளையத்தில் நடந்த மாவட்ட அளவிலான கேரம் போட்டியில், நிஜாமுதீன் முதலிடம் பிடித்தார்.
லயன்ஸ் ஸ்போர்ட்ஸ் கேரம் பயிற்சி மையம், கோவை மாவட்ட கேரம் சங்கம் சார்பில் மாவட்ட ஓபன் கேரம் போட்டி சவுரிபாளையத்தில் உள்ள சோசைட்டி ஹாலில் நடந்தது.
இப்போட்டியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 130க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதன் ஓபன் சீனியர் பிரிவில் நிஜாமுதீன் முதலிடம், அகர்சன் இரண்டாமிடம், செல்வராஜ் மூன்றாமிடம் பிடித்தனர். ஜூனியர் ஓபன் பிரிவில் ஹரிஹரன் முதலிடம், பரணிதரன் இரண்டாமிடம், ஸ்ரீபதி மூன்றாமிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கம், கோப்பை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. பரிசுகளை, மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன் வழங்கினார். பரிசளிப்பு விழாவில், கோவை மாவட்ட கேரம் சங்க செயலாளர் தங்ககுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.