/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாவட்ட சிலம்ப போட்டியில் போட்டியாளர்கள் அபாரம் மாவட்ட சிலம்ப போட்டியில் போட்டியாளர்கள் அபாரம்
மாவட்ட சிலம்ப போட்டியில் போட்டியாளர்கள் அபாரம்
மாவட்ட சிலம்ப போட்டியில் போட்டியாளர்கள் அபாரம்
மாவட்ட சிலம்ப போட்டியில் போட்டியாளர்கள் அபாரம்
ADDED : ஜூலை 09, 2024 11:32 PM

கோவை:மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில், வீரர் - வீராங்கனைகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி, பரிசுகளை வென்றனர்.
கோவை மாவட்ட சிலம்பம் ஸ்போர்ட்ஸ் சங்கம், கற்பகம் நிகர்நிலை பல்கலை சார்பில் 2024 - 2025ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி, ஈச்சனாரி கற்பகம் நிகற்நிலை பல்கலை வளாகத்தில் நடந்தது.
மாணவ - மாணவியருக்கு மினி சப்-ஜூனியர், சப்-ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் என நான்கு பிரிவுகளில் கம்பு வீச்சு, அலங்கார வீச்சு, வேல்கம்பு வீச்சு, ஒற்றை வாள் வீச்சு, இரட்டை வாள் வீச்சு, சுருள் வாள் வீச்சு, மான் கொம்பு வீச்சு, ஆயுத ஜோடி, புது ஆயுத வீச்சு, கம்பு சண்டை உள்ளிட்ட 13 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.
இதன் மினி சப் - ஜூனியர் பிரிவில், இம்மார்டல் சிலம்பாலயா அணி 121 புள்ளிகளுடன் முதலிடத்தையும், இளந்தளிர் அணி 112 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தையும் பிடித்தன. சப் - ஜூனியர் பிரிவில் இளந்தளிர் அணி 141 புள்ளிகளுடன் முதலிடத்தையும், சிலம்பாலயா 127 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தையும் பிடித்தன.
ஜூனியர் பிரிவில் இளந்தளிர் அணி, 87 புள்ளிகள் எடுத்து முதலிடத்தையும், சிலம்பாலயா அணி 46 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தையும் பிடித்தன. சீனியர் பிரிவில் கற்பகம் பல்கலை அணி 112 புள்ளிகளுடன் முதலிடம், இளந்தளிர் 69 புள்ளிகளுடன் இரண்டாமிடம் பிடித்தன.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு, மதுக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ஐ., ரவிச்சந்திரன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை, பல்கலை உடற்கல்வித்துறை இயக்குனர் சுதாகர் செய்திருந்தார்.