/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 25, 2024 11:38 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் வணிகவரித்துறை பணியாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழக அரசை கண்டித்து, பொள்ளாச்சி கோட்ட வணிக வரித்துறை அலுவலர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், வணிக வரித்துறை அலுவலகத்தில் நடந்தது. வணிக வரி பணியாளர் சங்க பொறுப்பாளர் மகேந்திரன் தலைமை வகித்தார்.
தமிழக அரசின் விரோத போக்கை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. கருணை அடிப்படை பணி நியமனத்துக்கு மறைமுக தடை உருவாக்கும் நியமன உச்சவரம்பு என்ற பத்தியை நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை நிர்வாகி கிருஷ்ணசாமி பேசினார். அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட இணை செயலாளர் ஆறுச்சாமி நன்றி கூறினார்.