/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பிக்கப் வேன் மோதி சோதனை சாவடி சேதம் பிக்கப் வேன் மோதி சோதனை சாவடி சேதம்
பிக்கப் வேன் மோதி சோதனை சாவடி சேதம்
பிக்கப் வேன் மோதி சோதனை சாவடி சேதம்
பிக்கப் வேன் மோதி சோதனை சாவடி சேதம்
ADDED : ஜூன் 18, 2024 10:51 PM

மேட்டுப்பாளையம்;ஊட்டி சாலையில் வேகமாக வந்த பிக்கப் வேன், கட்டுப்பாட்டை இழந்து, வனத்துறை சோதனை சாவடி மீது மோதியதில், கட்டடம் இடிந்தது.
மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில், கல்லாறு அருகே வனத்துறை சோதனை சாவடி உள்ளது. நேற்று மாலை வனவர் நாகேந்திரன், 52, பணியில் இருந்தார்.
அப்போது ஊட்டியில் இருந்து காளான் பெட்டிகளை ஏற்றிய பிக்கப் வேன் வேகமாக வந்தது. கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி, சாலையின் ஓரத்தில் இருந்த வனத்துறை சோதனை சாவடி மீது மோதியது.
இதில் சோதனை சாவடி கட்டடம் இடிந்து சேதமடைந்தது. பணியில் இருந்த வனவர் நாகேந்திரன், பிக்கப் வேனை ஓட்டி வந்த குன்னுாரை சேர்ந்த டிரைவர் ஜீவா, 20 ஆகிய இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.