/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பிளிச்சி ஊராட்சியில் பிளாஸ்டிக் குப்பை; நடவடிக்கை எடுக்க நிர்வாகம் தயக்கம் பிளிச்சி ஊராட்சியில் பிளாஸ்டிக் குப்பை; நடவடிக்கை எடுக்க நிர்வாகம் தயக்கம்
பிளிச்சி ஊராட்சியில் பிளாஸ்டிக் குப்பை; நடவடிக்கை எடுக்க நிர்வாகம் தயக்கம்
பிளிச்சி ஊராட்சியில் பிளாஸ்டிக் குப்பை; நடவடிக்கை எடுக்க நிர்வாகம் தயக்கம்
பிளிச்சி ஊராட்சியில் பிளாஸ்டிக் குப்பை; நடவடிக்கை எடுக்க நிர்வாகம் தயக்கம்
ADDED : ஜூன் 18, 2024 10:49 PM

பெ.நா.பாளையம்:பிளிச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகள் எங்கும் நிறைந்து கிடக்கிறது. நடவடிக்கை எடுக்க பிளிச்சி ஊராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டுகிறது.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், பிளிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிய குடியிருப்புகள் ஏராளமாக உருவாகி வருகின்றன. இங்கிருந்து தினமும் சுமார் மூன்று டன் எடையுள்ள குப்பைகள் குவிகின்றன. பிளாஸ்டிக் பை, கப் உள்ளிட்ட குப்பைகள் எங்கும் நிறைந்து கிடக்கின்றன. உள்ளாட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் கேரி பேக், கப் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தக் கூடாது என, தமிழக அரசு தடை விதித்து இருந்தாலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் ஏராளமாக பிளாஸ்டிக் பைகள் புழக்கத்தில் உள்ளது.
இது குறித்து பிளிச்சி ஊராட்சி பொதுமக்கள் கூறுகையில், 'பிளிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குப்பைகள் சரிவர அகற்றுவதில்லை. வடிகால்களில் இருந்து எடுக்கப்படும் குப்பைகள் அருகிலேயே கொட்டப்படுகின்றன. அதில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் காய்ந்தவுடன் மீண்டும் வடிகால்களில் விழுந்து, கழிவு நீர் தேக்கம் ஏற்படுகிறது. இதனால் கொசுக்கள் பெருகி, நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தும், நடவடிக்கை இல்லை. இங்குள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை உள்ளிட்டவை தாராளமாக விற்பனை செய்யப்படுகின்றன. இதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.