/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பா.ஜ.,வினர் 514 பேர் மீது வழக்கு பதிவு பா.ஜ.,வினர் 514 பேர் மீது வழக்கு பதிவு
பா.ஜ.,வினர் 514 பேர் மீது வழக்கு பதிவு
பா.ஜ.,வினர் 514 பேர் மீது வழக்கு பதிவு
பா.ஜ.,வினர் 514 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : ஜூன் 24, 2024 01:08 AM
கோவை;கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய, பா.ஜ.,வினர், 514 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த, 55க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை கண்டித்து வி.கே.கே., மேனன் ரோட்டில் பா.ஜ.,வினர் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, 500க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்துக்கு, போலீசார் கொண்டு சென்றனர்.
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியது, சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் ஆகிய பிரிவுகளில் காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், தெற்கு மாவட்ட தலைவர் வசந்த ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., சேலஞ்சர் துரை மற்றும், 106 பெண்கள் உட்பட, 496 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், 18 பேர் உட்பட, 514 பேர் மீது வழக்கு பதியப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.