/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வேட்பாளர்கள் பூரிப்பு... சிரிப்பு... ஆப்சென்ட்! கோவை லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை காட்சிகள் வேட்பாளர்கள் பூரிப்பு... சிரிப்பு... ஆப்சென்ட்! கோவை லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை காட்சிகள்
வேட்பாளர்கள் பூரிப்பு... சிரிப்பு... ஆப்சென்ட்! கோவை லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை காட்சிகள்
வேட்பாளர்கள் பூரிப்பு... சிரிப்பு... ஆப்சென்ட்! கோவை லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை காட்சிகள்
வேட்பாளர்கள் பூரிப்பு... சிரிப்பு... ஆப்சென்ட்! கோவை லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை காட்சிகள்

வந்தார்கள்...சென்றார்கள்!
n அ.தி.மு.க., வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், ஆதரவாளர்களுடன் உற்சாகமாக அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் சென்று ஓட்டு எண்ணிக்கையை பார்வையிட்டார். மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்ட போதிலும், முகத்தில் சோகம் இல்லை. சிரித்த முகத்துடன் ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டே வெளியேறினார். பத்திரிகையாளர்களை கடந்தபோது மட்டும், தலைகுனிந்து சென்றார்.
போதிய இட வசதியில்லை
லோக்சபா தேர்தல் மட்டுமின்றி, சட்டசபை தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, எப்போதும் ஜி.சி.டி., கல்லுாரி வளாகத்தில் தான் நடத்தப்படுவது வழக்கம். இம்முறை ஓட்டு எண்ணும் அறைகளில் போதிய வசதிகள் செய்யப்படவில்லை.
தயாராக இருந்த மருத்துவ குழு
n அவசர சிகிச்சை அளிப்பதற்காக, தரைத்தளத்தில், மருத்துவ குழுவினர் தயாராக இருந்தனர். குளூக்கோஸ் ஏற்றுவதற்கும் படுக்கை வசதி செய்யப்பட்டு இருந்தது.
ஒரே மாதிரியான உணவு
ஓட்டு எண்ணும் ஊழியர்கள், அதிகாரிகள், போலீசார், முகவர்கள் மற்றும் துாய்மை பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் காலை, மதியம் ஒரே மாதிரியான உணவு பார்சல் வழங்கப்பட்டது.