/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆசிரியர் காலனியில் மரம் வெட்டி அகற்றம் ஆசிரியர் காலனியில் மரம் வெட்டி அகற்றம்
ஆசிரியர் காலனியில் மரம் வெட்டி அகற்றம்
ஆசிரியர் காலனியில் மரம் வெட்டி அகற்றம்
ஆசிரியர் காலனியில் மரம் வெட்டி அகற்றம்
ADDED : ஜூன் 05, 2024 12:15 AM

பெ.நா.பாளையம்:நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி ஊழியர்கள், நன்கு வளர்ந்த புளிய மரத்தை வெட்டி அகற்றிய சம்பவம், இயற்கை ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பூச்சியூர் ரோட்டில் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட, 9வது வார்டு ஆசிரியர் காலனி பள்ளம் அருகே சுமார், 10 வயதான பத்தடி உயரமுள்ள புளியமரம் வளர்ந்து இருந்தது.
நேற்று இப்பகுதிக்கு, தூய்மை பணிக்கு வந்த நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி ஊழியர்கள், மரத்தை வேரோடு வெட்டி அகற்றி விட்டனர்.
இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், 'நன்கு வளர்ந்த புளியமரம், இப்பகுதிக்கு நிழல் தரும் மரமாக மாறும் சூழ்நிலையில், திடீரென பேரூராட்சி ஊழியர்களே வெட்டி அகற்றிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க, வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது' என்றனர்.