/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அ.தி.மு.க., தோல்வி கட்சி அலுவலகம் 'வெறிச்' அ.தி.மு.க., தோல்வி கட்சி அலுவலகம் 'வெறிச்'
அ.தி.மு.க., தோல்வி கட்சி அலுவலகம் 'வெறிச்'
அ.தி.மு.க., தோல்வி கட்சி அலுவலகம் 'வெறிச்'
அ.தி.மு.க., தோல்வி கட்சி அலுவலகம் 'வெறிச்'
ADDED : ஜூன் 05, 2024 12:13 AM

கோவை:ஜி.சி.டி., கல்லுாரியில் நேற்று ஓட்டு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஓட்டு எண்ணிக்கை துவங்கிய, முதல் சுற்றில் இருந்தே அ.தி.மு.க., வேட்பாளர், பின்னடைவை சந்தித்து வந்தார்.
அ.தி.மு.க., தங்கள் கோட்டை என கூறிக்கொள்ளும், அ.தி.மு.க.,வினருக்கு, தேர்தலில் கிடைத்த இந்த பின்னடைவு, பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தேர்தல் நேரங்களில் பரபரப்பாக காணப்பட்ட, அ.தி.மு.க., கட்சி அலுவலகமான இதய தெய்வம் மாளிகை வெறிச்சோடியது. ஓட்டு எண்ணிக்கை துவங்கும் நேரத்தில், கட்சி அலுவலகத்தில் திரண்ட தொண்டர்கள், ஒவ்வொரு சுற்றிலும் அ.தி.மு.க., வேட்பாளர் பின்னடைவை சந்தித்த போது, மனவேதனையுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.