/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தி.மு.க., முன்னிலை 500 பேருக்கு பிரியாணி தி.மு.க., முன்னிலை 500 பேருக்கு பிரியாணி
தி.மு.க., முன்னிலை 500 பேருக்கு பிரியாணி
தி.மு.க., முன்னிலை 500 பேருக்கு பிரியாணி
தி.மு.க., முன்னிலை 500 பேருக்கு பிரியாணி
ADDED : ஜூன் 05, 2024 12:11 AM
கோவை;கோவையில் தி.மு.க., வெற்றியை கொண்டாடும் விதமாக, 500 பேருக்கு மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது.
கோவை லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் ராஜ்குமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். இதை கொண்டாடும் விதமாக, கோவை கோட்டைமேடு கட்சி அலுவலகம் முன் கோவை மாநகர், மாவட்ட தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், 500 பேருக்கு நேற்று மதியம் மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது. தொடர்ந்து பட்டாசு வெடித்தும், மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
மாவட்ட துணை அமைப்பாளர் சித்திக் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட துணை செயலாளர் கோட்டை அப்பாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.