/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வேளாண் பல்கலையில் ரத்த தான முகாம் வேளாண் பல்கலையில் ரத்த தான முகாம்
வேளாண் பல்கலையில் ரத்த தான முகாம்
வேளாண் பல்கலையில் ரத்த தான முகாம்
வேளாண் பல்கலையில் ரத்த தான முகாம்
ADDED : ஜூன் 15, 2024 01:36 AM
கோவை;உலகக் குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ரத்த தான முகாம் நடந்தது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி, இ.எஸ்.ஐ., இணைந்து நடத்திய இம்முகாமை, பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, ரத்த தானம் செய்து துவங்கிவைத்தார்.
அதைத்தொடர்ந்து, பல்கலைக்கழக மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள், 104 யூனிட் ரத்த தானம் செய்தனர். பல்கலைக்கழக வேளாண்மை முதன்மையர் வெங்கடேச பழனிசாமி, மாணவர் நல மைய முதன்மையர் மரகதம், இயற்கை வள வேளாண்மை இயக்குனர் பாலசுப்ரமணியம், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ.., மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரவீந்திரன், மருத்துவக் குழு முதல்வர் உமா சரோஜினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவியர் ரத்த தானத்தை வலியுறுத்தும் விதமாக, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பேரணியாகச் சென்றனர்.