/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தாலுகா அலுவலகங்களில் வரும் 20-28 வரை ஜமாபந்தி தாலுகா அலுவலகங்களில் வரும் 20-28 வரை ஜமாபந்தி
தாலுகா அலுவலகங்களில் வரும் 20-28 வரை ஜமாபந்தி
தாலுகா அலுவலகங்களில் வரும் 20-28 வரை ஜமாபந்தி
தாலுகா அலுவலகங்களில் வரும் 20-28 வரை ஜமாபந்தி
ADDED : ஜூன் 15, 2024 01:37 AM
கோவை,;கோவை மாவட்டத்தில், 1433 பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) அந்தந்த தாசில்தார் அலுவலகங்களில் வரும்,20 முதல் 28 வரை நடக்கிறது.
இது குறித்து, கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:
பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு செய்தல், நில அளவை செய்தல், முதியோர் உதவித்தொகை பெறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, குடும்ப அட்டை, கலைஞர் மகளிர் உரிமை திட்டம் உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகள் தொடர்பாக, மக்கள் மனுக்களை கொடுக்கலாம்.
கோவை மாவட்டத்திலுள்ள, 11 தாலுகா அலுவலகங்களில் வரும், 20ம் தேதி காலை 10:00 மணிக்கு ஜமாபந்தி துவங்கும். மாலை 5:30 மணி வரை நடைபெறும். மேட்டுப்பாளையம், சூலுார் தாலுகாக்களுக்கு ஜூன் 26 வரை நடைபெறும். ஆனைமலை, அன்னுார், கிணத்துக்கடவு தாலுகாக்களுக்கு வரும் 25ம் தேதி வரையும், கோவை வடக்கு மற்றும் பொள்ளாச்சி தாலுகாவுக்கு வரும் 27 வரையும், பேரூர் தாலுகாவிற்கு வரும், 28 வரையும், கோவை தெற்கு தாலுகாவிற்கு 20, 21 ஆகிய இரு தினங்களுக்கு மட்டும் ஜமாபந்தி நடைபெறும்.
இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.