ADDED : ஜூன் 21, 2024 11:41 PM
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பார்கள், தனியார் பார்கள், தபாக்களில் கலப்பட மது விற்பனை செய்யப்படுகிறதா என போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி சம்பவத்தின் எதிரொலியாக, கோவை மாவட்டத்தில் போலீசார் பல்வேறு இடங்களிலும் கள்ள சந்தையில் மது, சாராயம், கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னுாரில் நேற்று முன் தினம் ஒரே நாளில் 150 லிட்டர் கள், 188 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பார்கள், தனியார் பார்கள், தபாக்களில் கலப்பட மது விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை மேற்கொண்டனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''டாஸ்மாக் பார்கள், தனியார் பார்கள், தபாக்கள் போன்றவற்றில் கலப்பட மது உள்ளதா என தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறோம். அப்படி விற்பனை செய்யப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றனர்.