Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மீண்டும் மஞ்சப்பை திட்டம்; செயல்படுத்துவதில் வாட்டம்

மீண்டும் மஞ்சப்பை திட்டம்; செயல்படுத்துவதில் வாட்டம்

மீண்டும் மஞ்சப்பை திட்டம்; செயல்படுத்துவதில் வாட்டம்

மீண்டும் மஞ்சப்பை திட்டம்; செயல்படுத்துவதில் வாட்டம்

ADDED : ஜூலை 15, 2024 02:27 AM


Google News
Latest Tamil News
பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் சுற்றுப்புற சூழலை வளப்படுத்த, மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை செயல்படுத்த, உள்ளாட்சி நிர்வாகங்கள் தொடர்ந்து சுணக்கம் காட்டி வருகின்றன.

தமிழக அரசு, 2019ம் ஆண்டு ஜன., 1 முதல், ஒரு முறை பயன்படுத்தி, துாக்கி எறியப்படும், 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை நடைமுறைக்கு கொண்டு வந்தது.

உணவுப் பொருட்கள் வைக்கப்படும் பிளாஸ்டிக் உறை, மேஜை மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் விரிப்பு, தெர்மாகோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் பைகள், தேநீர் குவளைகள், தெர்மாகோல் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், உறிஞ்சு குழாய்கள், பிளாஸ்டிக் பைகள், கொடிகள் உள்ளிட்டவை தடை செய்யப்பட்ட பொருட்கள் என, தமிழக அரசு அறிவித்தது.

பிளாஸ்டிக் தடையை மீறினால் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஒரு லட்ச ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். தொடர்ந்து, சட்டத்தை மீறினால் நாள் ஒன்றுக்கு, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, மத்திய அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் வழி செய்கிறது. ஆனாலும், இதை முறையாக அமல்படுத்தாததால், பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு குறையாமல் உள்ளது.

இது குறித்து, பொதுமக்கள் கூறுகையில், ''பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள் கடைகளில் தாராளமாக விற்பனை செய்யப்படுகின்றன.

கோவையில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம், காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட், மேட்டுப்பாளையம் ரோடு, சூலுார் உள்ளிட்ட ஏழு இடங்களில் மஞ்சப்பை விற்பனை இயந்திரங்களை நிறுவியது. அவற்றில் பெரும்பாலானவை தற்போது செயல்படாமல் கிடக்கிறது. உள்ளாட்சிகள் சார்பில், மஞ்சப்பை திட்டத்தை செயல்படுத்த போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை. உயர் அதிகாரிகள் சோதனையிடும் போது மட்டுமே, பேருக்கு சில கடைகளில் சோதனை செய்து அபராதம் விதிக்கின்றனர். மீண்டும் அடுத்த நாள் முதல் பிளாஸ்டிக் பைகள், அதே கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன,'' என்றனர்.

மஞ்சப்பை திட்டத்தை செயல்படுத்தி வரும் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில்,'' பெரியநாயக்கன்பாளையம் வளம் மீட்பு பூங்கா வளாகத்தில் மஞ்சப் பை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது கடைகளின் தேவைக்கு ஏற்ப மஞ்சப்பை வழங்கப்பட்டு வருகிறது,'' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us