/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ முறைகேடான குடிநீர் இணைப்பு துண்டித்துக் கொள்ள அறிவுரை முறைகேடான குடிநீர் இணைப்பு துண்டித்துக் கொள்ள அறிவுரை
முறைகேடான குடிநீர் இணைப்பு துண்டித்துக் கொள்ள அறிவுரை
முறைகேடான குடிநீர் இணைப்பு துண்டித்துக் கொள்ள அறிவுரை
முறைகேடான குடிநீர் இணைப்பு துண்டித்துக் கொள்ள அறிவுரை
ADDED : ஜூலை 15, 2024 02:27 AM
மேட்டுப்பாளையம்;அனுமதி பெறாமல் முறைகேடாக குடிநீர் இணைப்பு எடுத்தவர்கள், தாமாக முன்வந்து குடிநீர் இணைப்பை துண்டித்துக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில், அபராத தொகையுடன், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, நகராட்சி கமிஷனர் அறிவித்துள்ளார்.
மேட்டுப்பாளையம் நகராட்சியில் குடியிருக்கும் பொதுமக்கள், 2023--24ம் ஆண்டு வரை நிலுவையில் உள்ள, அனைத்து வரி இனங்கள் மற்றும் குடிநீர் கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும்.
மேலும், நகராட்சி பகுதியில் அனுமதி பெறாமல், முறைகேடாக குடிநீர் இணைப்பு எடுத்தவர்கள், தாமாக முன்வந்து, குடிநீர் இணைப்பை துண்டித்துக் கொள்ள வேண்டும். மேலும், முறையாக விண்ணப்பித்து குடிநீர் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம். தவறும் பட்சத்தில் அபராதம் விதிப்பதுடன், அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா தெரிவித்துள்ளார்.